சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேட்டூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேட்டூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
X

மேட்டூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிக் கூட்டம்.

Madheswaran Temple Mettur-மேட்டூரில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு பேருந்தில் செல்ல கூட்டம் அலைமோதியது.

Madheswaran Temple Mettur-மாதேசுவரன் கோயில் என்கிற தலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது. இம்மலை தெற்கு கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கீ.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது. ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க திருத்தலம். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

சுமார் 50 வருடத்திற்கு முன்பு இந்த மலைக்குச் சாலை வசதி இல்லை. அதனால் இங்கே வரும் பக்தர்கள் பெரும்பாலும் நடந்து தான் வந்தார்கள். ஆனால் இப்போது சாலைகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளால் போடப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு பௌர்ணமி, அமாவாசை, யுகாதி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

மாதேஸ்வரன் மலை கோவில் செல்வதற்காக பக்தர்கள் வசதிக்காக மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் 16 பேருந்துகளும், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் சார்பில் 4 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமியையொட்டி மேட்டூரில் இருந்து கூடுதலாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 5 சிறப்பு பேருந்துகள் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்வதற்காத பக்தர்கள் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மேலும் ஒரு சிலர் பேருந்து ஜன்னல் வழியாக குழந்தைகளை அனுப்பி இடம் பிடித்தனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பேருந்தில் ஏற வந்த பயணிகள் பெறும் சிரமத்திற்குள்ளாகினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு