சேலத்தில் ரூ.20 கோடியில் சர்வதேச பல் விளையாட்டு அரங்கம் அமைக்க 3 இடங்கள் தேர்வு

சேலத்தில்  ரூ.20 கோடியில் சர்வதேச பல் விளையாட்டு அரங்கம் அமைக்க 3 இடங்கள் தேர்வு
X

சேலத்தில் அமையவுள்ள சர்வதேச பல் விளையாட்டு அரங்கம் மாதிரி படம்.

சேலத்தில் ரூ.20 கோடியில் சர்வதேச பல் விளையாட்டு அரங்கம் அமைக்க 3 இடங்களை அரசு தேர்வு செய்துள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் மார்க்கெட் புதுப்பிக்கும் பணி முடிவடைந்து போஸ் மைதானத்தில் நேரு அரங்கம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையத்தில் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது.

மேலும் புதிய சர்வதேச பல் விளையாட்டு அரங்கம் ரூ.20 கோடியில் அமைப்பதற்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், எஃகு ஆலை வளாகம் மற்றும் ஏற்காடு மலையடிவாரம் ஆகிய 3 இடங்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் சேலம் மாநகரிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story