/* */

இராமநாதபுரத்தில் மணல் குவாரி அமைக்க டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் மணல் குவாரி அமைக்க டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை
X

ராமநாதபுரம் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் ரயில்நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் குவாரி அமைக்க டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை.
ராமநாதபுரம் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் ரயில்நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் பொன்பெரியார் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி தங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த்தி, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
இந்த கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக ஜெயபாரத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல சங்கத்தின் செயலாளராக ராஜமாணிக்கம் பொருளாளராக முத்தீஸ்குமார் துணை தலைவராக பஞ்சுராஜன் துணை செயலாளர் அம்மாரி சங்கர் இணை செயலாளர் சபரீஸ்வரன் நீதி அரசன் சட்டஆலோசர்களாக மணிகண்டன் தர்மலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கட்டுமான பொருட்களின் தேவைக்கு வெளிமாவட்டங்களை நம்பியே உள்ளதோடு ஆற்று மணல் பற்றாக்குறை என்ற காரணத்தினால் எம்.சாண்ட் வாங்க வைத்த நிலையில் தற்போது எம்சாண்ட் மணல் ரூ.18 ஆயிரம் விலைக்கு சென்றுவிட்டது. இதனால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் தேவையின்றி உள்ள மணல்மேடுகளை சவடுமண் குவாரிக்கு அனுமதி அளிக்க வேண்டும் இதன்மூலம் சவடுமணல் ரூ.8 ஆயிரம் அளவில் மக்களுக்கு வழங்க முடியும்.
மாவட்டத்தில் கட்டிடங்களின் கட்டுமான தரைத்தளங்களை நிரப்ப பயன்படுத்தப்படும் சிவப்பு மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஏர்வாடி பகுதியில் சிவப்பு மணல் மேடுகளை குவாரி அனுமதிக்கு வழங்கிட வேண்டும் மாவட்ட தேவையை கருத்தில் கொண்டு சவடுமணல் குவாரிக்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் செயலாளர்களான அமீர்கான் முருகேசன் அசோக்குமார்இ வாழமூர்த்தி ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகுமார் நன்றி கூறினார்.
Updated On: 27 Dec 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு