/* */

இராமேஸ்வரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் இராமேஸ்வரத்தில் ஆய்வு.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ஆய்வு
X

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் இராமேஸ்வரத்தில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் இராமேஸ்வரத்தில் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பொறுப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இந்நிலையில் இன்று பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இராமேஸ்வரம் அடுத்துள்ள நடராஜபுரம், தெற்கு கரையூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு துறையினரின் வெள்ள மீட்பு மற்றும் பொதுப்பணித் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள ஆயிரம் நபர்கள் தங்கும் வசதி கூடிய பள்ளிக்கூட காப்பகம், அதேபோல் இராமேஸ்வரம் பகுதியில் மழை பெய்தால் மழைநீர் தேங்கும் இடமான அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: இராமநாதபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று மாவட்டம் முழுவதும் நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை மழையினால் இருவர் இறந்துள்ளனர். அறுபத்தி ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் ஏழு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கான இழப்பீடு தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் அதிக மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே இதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாத், இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 10 Nov 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு