/* */

புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெண்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இந்த டாஸ்மாக் கடைகளால் எந்தவித பாதுகாப்பும் இருக்காது

HIGHLIGHTS

புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண்கள்

புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி அருகே உள்ள வடுகன்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்காக கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்த வடுகபட்டி, வடுகன் வயல், இடையபட்டி, வாகவசல் உள்ளிட்ட கிராம மக்கள் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் , வடுகம்பட்டி, வடுகபட்டி , வாகவசல், இடையபட்டி ஆகிய கிராமத்தில் இருந்து தினந்தோறும், அந்த டாஸ்மாக் கடையை கடந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் சிப்காட் தொழிற்பேட்டை வேலைக்கு அவ்வழியாக செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.

பெண்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த டாஸ்மாக் கடையால் எந்தவித பாதுகாப்பும் இருக்காது என்றும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், டாஸ்மாக் கடையை அப்பகுதிக்கு வந்தால் கடைகளை அடித்து நொறுக்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனு கொடுக்க வந்த பெண்கள் தெரிவித்தனர்.


Updated On: 27 Sep 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...