/* */

பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பகவான் பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் மீட்க பட்டனர்.

HIGHLIGHTS

பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
X

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, மீசை நல்லூரைச் சேர்ந்த சுரேஷ் 27, ஜெயா 23 தம்பதிகள் மற்றும் எல்லப்பன் 38, உமா 28 தம்பதிகள், அழும் குழந்தைகளான, சக்திவேல் 11, திவ்யா 10, ராகவன் 8 ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, பகவான் பட்டியில் கோவிந்தன் மகன் தாமரைச்செல்வன் என்பவரது கரும்புத் தோட்டத்தில் 30 ஆயிரம் ரூபாய் கூலிக்கு வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தோட்டத்து உரிமையாளரான தாமரைச்செல்வன் இவர்களை அடித்து, துன்புறுத்தி வேலை வாங்கியுள்ளார். இதனை அடுத்து சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உதவியுடன் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரையும் மீட்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் மூலம் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, தங்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக ஆர்டிஓ டெய்சிகுமார் தெரிவித்தார். மேலும் அவர்களிடம் விசாரிக்கையில்,

தங்களை அடித்தும், பொங்கலுக்கு ஊருக்கு சென்று வர அனுமதி இல்லை என்றும், உறவினர் மறைவுக்கு ஊருக்கு சென்று வர அனுமதி வழங்காமலும், தற்பொழுது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க அனுமதியில்லை என்றும் சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிவித்தனர்.

Updated On: 22 April 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!