/* */

இல்லாத வீட்டிற்கு வாழ்த்து கடிதமா? பெரம்பலூர் தொழிலாளியின் பரிதாப கேள்வி

இல்லாத வீட்டிற்கு வாழ்த்து கடிதமா? பெரம்பலூர் தொழிலாளியின் பரிதாப கேள்வி விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

இல்லாத வீட்டிற்கு வாழ்த்து கடிதமா? பெரம்பலூர் தொழிலாளியின் பரிதாப கேள்வி
X

இல்லாத வீட்டிற்கு வாழ்த்து கடிதமா? என கேள்வி எழுப்பினார்  பெரம்பலூர் தொழிலாளி.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாடி புதுகாலனியில் வசிப்பவர் நீல்ராஜ்(46) மனைவி சரிதா(36) இவர். கூலி வேலை செய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட நீல்ராஜ் தங்களுக்கு பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்துள்ளனர்.

இந்நிலையில் நீல்ராஜிக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் முதன்மை செயலாளரும், திட்ட இயக்குனரிடம் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், நீல்ராஜ் குடும்பத்தினர் பயனடைந்துள்ளதாகவும், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை படித்து பார்த்த நீல்ராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவிற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரையில் வீடு வழங்கப்படவும் இல்லை. இந்நிலையில் பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு பெற்று விட்டதாக வாழ்த்து செய்தி அனுப்பி இருப்பது எப்படி என்று தெரியாமல் டிசம்பர் - 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த அவர் இதுகுறித்து முறையிட்டு தனக்கு முறையாக வீடு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

இல்லாத வீட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியதோடு, அந்த திட்டம் தொடர்பான போட்டியில் பங்கேற்று பரிசு பெற மத்திய அரசு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 Dec 2021 4:25 PM GMT

Related News