நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி

நீலகிரி தொகுதி போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்.ராசா, எல்.முருகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், இத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், இத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம் பிடித்து வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதற்காக தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகளைப் பிரித்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளன.

அதன்படி, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர், 2009ம் ஆண்டு முதல் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வருவதால் நீலகிரி அவருடைய சொந்த ஊராக மாறிவிட்டது. ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, 4வது முறையாக நீலகிரி வேட்பாளராக களம் காண்கிறார்.

இந்த நிலையில், அதிமுக சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். புது முகமாக இருந்தாலும் இவர் அதிமுக தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் இவருக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டி இருப்பதும், இவருடைய திருமணத்தை ஜெயலலிதா நடத்தி இருப்பதும் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.

இதனிடையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல்.முருகன் மீண்டும் போட்டியிடுகிறார். இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல்.முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

Tags

Next Story