Thalapathy 69 விஜய் சம்பளம் 275கோடி இல்லையாம்பா!
விஜய் தனது கடைசி படத்துக்கு வாங்கிய சம்பளம் 275 கோடி ரூபாய் என பேசப்பட்டு வரும் சூழலில்,அது பொய் என்றும் 200 கோடி கூட இருக்க வாய்ப்பில்லை எனவும் வேறொரு தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் அடுத்து அரசியல் களத்துக்கு செல்ல இருப்பதால் தனது கடைசி படமாக தளபதி 69 மட்டும்தான் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் கடைசி படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் பல திட்டங்களுடன் படத்தை துவங்க இருக்கிறது.
தளபதி 69 பூஜை எப்போது? | Thalapathy 69 pooja ceremony
தளபதி விஜய் நடிக்கும் தற்போதைக்கு கடைசி படமாக கூறப்படும் தளபதி 69 படத்தின் பூஜை வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறதாம்.
தளபதி 69 ஷூட்டிங் அப்டேட் | Thalapathy 69 shooting date
அக்டோபர் 5ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் காலையில் சென்னையின் பிரபல படப்பிடிப்புத் தளத்தில் இந்த படத்தின் முதல் காட்சியை துவங்குகிறார்கள். முதல் காட்சியே பாடல் காட்சி என்றும் அதற்கான டம்மி லிரிக் டியூன் அனிருத் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 69 இசை | Thalapathy 69 Music
தளபதி 69 படத்தில் துள்ளலாக ஆட்டம்போடும் பாடல்களுடன் அர்த்தமுள்ள அறிவுரைக் கூறும் ஒரு இன்ட்ரோ பாடலும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாடலைத் தான் முதலாவதாக படம்பிடிக்க இருக்கிறதாம் படக்குழு. மொத்தம் 5 பாடல்கள் இருக்கலாம் மற்றும் அதனுடன் பின்னணி இசைக்கான பிஜிஎம்களும் இணைக்கப்படலாம்.
தளபதி 69 ஹீரோயின் | Thalapathy 69 heroine
படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே. மற்றொருவர் தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர். இவர் ஏற்கனவே தனுஷ், அஜித் ஆகியோருடன் நடித்துள்ளார். இது தமிழில் 4வது படமாக இது அமையும்.
தளபதி 69 தலைப்பு என்ன? | Thalapathy 69 movie name
படத்தின் தலைப்பு தமிழில் இருக்கும் என்றும், நிச்சயமாக ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. படத்தின் தலைப்பை இன்னும் உறுதி செய்யவில்லையாம்.
தளபதி 69 விஜய் சம்பளம் | Thalapathy 69 vijay salary
இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை அதிகாரப்பூர்வமாக நாம் அறிந்துகொள்ள முடியாது. இந்த தொகை பிரபல ஹாலிவுட் நடிகரான ஜூனியர் ராபர்ட் டோனியின் சம்பளத்தை விட மிக அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட சம்பளம் என்றும் உண்மையில் கோட் படத்துக்கு விஜய் 175 கோடி ரூபாயும், தளபதி 69 படத்துக்கு 200 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu