காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் பிப்.11-ல் தைப்பூச தேர் திருவிழா..! வரும் 3-ல் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்!
X
By - jananim |1 Feb 2025 3:33 PM IST
காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 11-ல் தைப்பூச தேர் திருவிழா நடக்கிறது. முன்னதாக வரும், 3-ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
மோகனுார்: காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 11ல் தைப்பூச தேர் திருவிழா நடக்கிறது. முன்னதாக, வரும், 3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
மோகனுாரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச திருத்தேர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, வரும், 11ல் நடக்கிறது. முன்னதாக, வரும், 3 காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
விழா நிகழ்ச்சிகள்
தேதி | காலை | மாலை |
---|---|---|
பிப்.3 | 9:00 கொடியேற்றம் | 6:00 அபிஷேகம், சுவாமி திருவீதி உலா |
பிப்.4-10 | 10:00 அபிஷேகம் | 6:00 அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா |
பிப்.9 | 10:00 அபிஷேகம் | 6:00 திருக்கல்யாணம் |
பிப்.11 | 10:30 சுவாமி திருத்தேர் ஏற்றம் | 5:00 திருத்தேர் வடம் பிடித்தல் |
பிப்.12 | அபிஷேகம் | சத்தாபரணம் |
பிப்.13 | விடையாற்றி, மஞ்சள் நீர் பல்லக்கு | |
பிப்.14 | மயில் வாகனத்தில் திருவீதி உலா |
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu