இராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துக் கழிவுகள் - வட்டாட்சியர் ஆய்வு
![இராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துக் கழிவுகள் - வட்டாட்சியர் ஆய்வு இராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துக் கழிவுகள் - வட்டாட்சியர் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2025/02/08/1976636-tjxy.webp)
நாமக்கல் : இராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் காலாவதியான மருந்துக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் சாலையில் உள்ள இராசிபுரம் ஏரியின் கரையோரப் பகுதியில் காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், மருத்துவ துறையினர், நகராட்சி சுகாதாரத் துறையினர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், சில ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரை அட்டைகள் ஏராளமாக இருந்தன.
நீர்நிலை பகுதியில் கால்நடைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனை மொத்த விற்பனையாளர்கள், மருந்து கடைகாரர்கள் கொட்டியிருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu