திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்தில் புதிய குடியிருப்பு கட்டடத்திற்கு பூஜை

தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்பு கட்ட பூமி பூஜை
திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்தில் புதிய குடியிருப்பு வளாகத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நாமக்கல் ரோடு, சாலப்பாளையத்தில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் வீரர்களுக்காக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.
இத்திட்டத்திற்காக ரூ.3 கோடியே 22 லட்சத்து 57,000 மதிப்பீட்டில், 24,552 சதுரடி பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் இரண்டு நிலைய அலுவலர் குடியிருப்புகளும், 12 தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்புகளும் அமையவுள்ளன.
பூமி பூஜை நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈஸ்வரன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. மூர்த்தி, நகராட்சி தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு, சேலம் கோட்டை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் திரு. கல்யாணகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. செந்தில்குமார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu