புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற டிரினிடி கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கலை அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் புதுமைப்பெண் திட்ட கல்வி உதவித்தொகை பெறும், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாமக்கல்,
தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி கற்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்து, உயர்கல்வியில் சேரும் அனைத்து மா£ணவிகளுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000 கல்வி உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவிகளின் சேமிப்பு கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024&-2025-ம் கல்வி ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும், மாணவிகள் 292 பேருக்கு, ரூ. 29 லட்சத்து 61 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக பெறப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் பயனடைந்த டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் தென்பாண்டியன் நல்லுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் பிஎஸ்கே செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், துணை முதல்வர் நவமணி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நோடல் அலுவலர் அனிதா, புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோபியா, மதுக்கரைவேணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu