வங்கிகளில் தங்க நகைக்கடன் புதுப்பித்தலுக்கான புதிய நடைமுறைகளை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும் : மத்திய நிதியமைச்சருக்கு நாமக்கல் எம்.பி., கோரிக்கை

வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் கொமதேக., எம்.பி.,
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன், மத்திய நிதியயமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த செப்டம்பார் மாதம், தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதில் புதிய நடைமுறைக்கான சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் நிதி நிறுவனங்களில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்கள் அவசரத் தேவைக்காக, தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகின்றனர். வழக்கமாக கடன் பெற்று ஒரு ஆண்டு முடிவில், ஏற்கனவே பெற்ற கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி, மறு அடகு வைத்து, கடனை மேலும் ஒரு ஆண்டுக்கு புதுப்பித்து வந்தனர். இந்த முறை கடன் பெற்றவர்களுக்கு எளிமையாக இருந்து வந்தது.
தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி நகைக்கடன் காலம் முடிவடையும் நாளில், அசல் மற்றும் வட்டியுடன் பணத்தை திருப்பிச் செலுத்தி, நகையைத் திரும்பப்பெற்று, அடுத்த நாள் தான் மீண்டும் கடன் பெற முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் நகைக்கடன் பெறுகின்றனர். அவர்கள் மீண்டும் நகைக்கடன் பெற அசல் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கூடுதல் வட்டிக்கு தனியாரிடம் கடன் பெறவேண்டியுள்ளது. மேலும் வீனான காலதாமதம் மற்றும் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே, மத்திய ரிசர்வ் வங்கியின் நகைக்கடனுக்கான புதிய நடைமுறையை மாற்றி, மீண்டும் பழைய நடைமுறையில் கடன் வழங்கிட, நிதியைமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu