ராசிபுரம் அருகே நாய் மீது துப்பாக்கிச் சூடு : தம்பதியர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ராசிபுரம் அருகே நாய் மீது துப்பாக்கிச் சூடு :    தம்பதியர் மீது போலீசார் வழக்குப்பதிவு
X
ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில், ஏர்கன் துப்பாக்கியால் நாயை சுட்ட தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது.


நாமக்கல்,

ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில், ஏர்கன் துப்பாக்கியால் நாயை சுட்ட தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம் அருகே உள்ள ஆர்.பட்டணம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள, தண்டு மாரியம்மன் கோயில் அருகில், தெருநாய் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏர்கன் மூலம் சுடும் வீடியோ, ஒருசில செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பட்டணம் பகுதியைச் சேர்ந்த வினோத் (50) மற்றும் அவரது மனைவி தேவி என அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை செய்ததில், வெறி நாய் ஒன்று தங்களது குழந்தைகளை கடிக்க வந்ததாகவும், அதனால் அவரது நண்பர் ஒருவரிடம் இருந்து, ஏர்கன் ஒன்றை வாங்கி வந்து அந்த நாயை நோக்கி சுட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த நாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது சம்பந்தமாக சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏர்கன் மூலம் நாயை சுட்ட வினோத் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இது சம்பந்தமாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று அவர் தெரிவிததுள்ளார்.

Next Story