நாமக்கலில் இலவச காது பரிசோதனை முகாம் தொடக்கம்

நாமக்கலில் இலவச காது பரிசோதனை முகாம் தொடக்கம்
X
நாமக்கலில், கியூர் ஹியரிங் எய்டு சென்டர் நடத்தும் இலவச காது பரிசோதனை முகாம் இன்று தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது

நாமக்கலில் இலவச காது பரிசோதனை முகாம் தொடக்கம்

நாமக்கல் - துறையூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் கியூர் ஹியரிங் எய்டு சென்டர் நடத்தும் இலவச காது பரிசோதனை முகாம் இன்று தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் இந்த முகாமில், அனைவருக்கும் இலவசமாகக் காது பரிசோதனை செய்யப்படுகிறது. அதோடு, பழைய காது கருவிகளை மாற்ற விரும்புவோருக்கு, புதிய காது கருவிகள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.

நிறுவனர் சுந்தரவேல் கூறியதாவது, காது பிரச்னைகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், அதனை சரியான முறையில் சிகிச்சை செய்ய முடியும். எங்களுடைய மையத்தில், தொழில்நுட்ப ரீதியாக துல்லியமான பரிசோதனை மூலம், கேட்கும் திறனை மதிப்பீடு செய்து, முன்னணி நிறுவனங்களின் தரமான காது கருவிகளை வழங்குகிறோம். இரைச்சல், கேட்கும் திறன் குறைதல் போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை எளிதாக பெற முடியும்.

மேலும், இங்கு புளூடூத் வசதியுடன் மொபைலுக்கு இணைக்கக்கூடிய கருவிகள், கண்ணுக்கு தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்ட சிறிய கருவிகள், ரீசார்ஜபுல் கருவிகள் என பல வகையான நவீன மாடல்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன என்றும், இந்த முகாமை பொதுமக்கள் பயனாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
future of ai in next 5 years