திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல் போட்டி

Namakkal news- நாமக்கல்லில் திமுக சார்பில் நடைபெற்ற, கவிதை ஒப்புவித்தல் போட்டியில், வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Namakkal news, Namakkal news today- மறைந்த தமிழக முதல்வர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் குமரவேல் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன் விழாவை தொடங்கி வைத்தார். கவிதை ஒப்புவித்தல் போட்டியில் 150 மாணவ மாணவியரும், திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டியில் 120 மாணவ மாணவியரும் பங்கேற்றனர்.
இதில், ராசிபுரம் ஆர்.சி.பள்ளி மாணவி நசீபா முதலிடத்தையும், தேங்கல்பாளையம் அரசுப் பள்ளி மாணவர் விக்னேஸ்வரன் இரண்டாமிடம், ஒருவந்தூர் அரசுப் பள்ளி மாணவி தர்ஷினி மூன்றாமிடம் பெற்றனர். அவர்களுக்கு முறையே ரூ. 5,000, ரூ. 2,000, ரூ. 1,000 வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மற்ற மாணவ, மாணவிகள் ஆறுதல் பரிசுகள் பெற்றனர். நடுவர்களாக உழவன் தங்கவேல், புலவர் வளையப்பட்டி சுப்பிரமணியம், புலவர் சங்கரன், ஆசிரியர் சங்கரன் ஆகியோர் பங்கேற்றனா?.
இந்த நிகழ்ச்சியில், மாநில திமுக நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், நக்கீரன், நகராட்சித் தலைவர் கலாநிதி, மாவட்ட நிர்வாகிகள் நலங்கிள்ளி, நகரச் செயலாளர்கள் பூபதி, ஆனந்த், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், கீரம்பூர் அய்யாவு, நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர் பிரபு வேனுகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu