நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் மாவட்ட முதலிடம் பெற்று சாதனை

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு, பள்ளி சேர்மன் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வில் நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம்: தமிழ்-100, கணிதம் -100, தகவல் தொழில்நுட்பம் -100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 99, ஆங்கிலம் - 98. மாணவி ஸ்ருதிகா - 500-க்கு 491 மதிப்பெண் பெற்று 2ஆம் இடமும், அக்ஷத் சிவராஜ் மற்றும் ஜீவிகா -ஆகியோர் தலா 500-க்கு 490 மதிப்பெண் பெற்று 3ஆம் இடமும் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 7 பேர் தமிழ் பாடத்திலும், 2 பேர் அறிவியல் பாடத்திலும், 2 பேர் தகவல் தொழில்நுட்ப பாடத்திலும், ஒருவர் கணித பாடத்திலும், ஒருவர் சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 50 சதவீத மாணவ மாணவியர் 500க்கு 450க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர் சஞ்ஜிதா கண்ணன் 500-க்கு 484 மதிப்பெண் பெற்று முதலிடமும், நிரஞ்சன் 500-க்கு 474 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், ஆரவ் சிவராஜ் மற்றும் சக்தி நந்தன் ஆகியோர் 500-க்கு 473 பெற்று 3ஆம் இடமும் பிடித்துள்ளனர். ஓவிய பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் ஒருவரும், வேதியியல் பாடத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஒருவரும் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3 பேர் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 2 பேர் 98 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் ஒருவர் 98 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 2 பேர் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளர்னர். இயற்பியல் பாடத்தில் ஒருவரும், உடற்கல்வி பாடத்தில் ஒருவரும், பொருளியல் பாடத்தில் ஒருவரும் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் வணிகவியல் பாடத்தில் ஒருவர் 92 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த, பள்ளி மாணவ மாணவிகளை, பள்ளி சேர்மன் சரவணன், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu