10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் சாதனை

நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் - சேலம் மெயின் ரோட்டில், பொம்மைக்குட்டை மேட்டில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2024&25ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்பு படித்து அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி கீர்த்தனா 500க்கு 496 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து மாணவி யஷ்மிதா 494 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், மாணவி கனிஷ்கா 493 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ள 100 சதவீதத்தை தேர்ச்சியை பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்த மாணவ மாணவிகளை காமராஜர் கல்வி நிறுவனங்களில் சேர்மன் கணேசன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் நடராஜன், இயக்குனர்கள் சுந்தர்ராஜன், ஆடிட்டர் செல்வராஜ், ராஜா, தங்கவேல், மகேஸ்வரன், சுப்பிரமணியம், செல்வம், முத்துசாமி, ரகுபதி, பள்ளியின் முதல்வர் சுதா, தலைமை ஆசிரியர் காளியண்ணன், உதவி தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu