'கல்லூரி கனவு' நிகழ்ச்சி - மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்

கல்லூரி கனவு நிகழ்ச்சி - மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்
X
ஈரோடு மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்த மற்றும் இடைநின்ற மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோட்டில் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி - மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் :

ஈரோடு மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்த மற்றும் இடைநின்ற மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு எம்.பி. பிரகாஷ் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ. சாந்தகுமார் தலைமை வகித்து பேசினார். ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 62 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர். பல்வேறு கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி, கல்வி கடன் வசதி, தொழில்நுட்ப படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டன. மேயர் நாகரத்தினம், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பராணி, உயர் கல்வி வழிகாட்டி வல்லுனர்கள் அஸ்வின், அன்பரசு, ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags

Next Story