மோகனூர் அருகே மது குடிக்க பணம் தரமறுத்த பாட்டி அடித்துக் கொலை : பேரனுக்கு போலீஸ் வலை

மோகனூர் அருகே மது குடிக்க பணம்  தரமறுத்த பாட்டி அடித்துக் கொலை :  பேரனுக்கு போலீஸ் வலை
X

பைல் படம்

மோகனூர் அருகே மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த பாட்டியை, உருட்டை கட்டையால் அடித்து கொலை செய்த பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல்,

மோகனூர் அருகே மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த பாட்டியை, உருட்டை கட்டையால் அடித்து கொலை செய்த பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த மணப்பள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி, இவரது மனைவி தெய்வானை, (80). அவர், முதியோர் உதவி தொகை பெற்று ஜீவனம் நடத்தி வந்தார். அவரது மகள் வசந்தியின் மகன் வினோத்பாபு (42). அவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றனர். அதையடுத்து, குடி பழக்கத்துக்கு அடிமையான வினோத்பாபு, அடிக்கடி குடித்துவிட்டு பாட்டி வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை, 4:45 மணிக்கு, வினோத்பாபு தனது பாட்டி தெய்வானையிடம் சென்று, குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தரமறுத்துள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த வினோத்பாபு, அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து, சரமாரியாக பாட்டி தெய்வானையை தாக்கினார். அதில், படுகாயம் அடைந்த தெய்வானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இறந்துபோன தெய்வானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்க அனுப்பி வைத்தனர். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வினோத்பாபுவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story