நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 23ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 23ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

பைல் படம் 

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் வருகிற 23ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் வருகிற 23ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டத்திற்கு, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். சம்மந்தப்பட்ட ஆர்டிஓக்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிவார்கள்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story