உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் தேனீ வளர்ப்பு பயிற்சி

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு    நாமக்கல்லில் தேனீ வளர்ப்பு பயிற்சி
X

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் வேளாண் அறிவியில் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் வேளாண்மை அறிவியில் நிலையத்தில் (கேவிகே) உலக தேனீ தின விழா நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் வேளாண்மை அறிவியில் நிலையத்தில் (கேவிகே) உலக தேனீ தின விழா நடைபெற்றது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீ தினத்தை முன்னிட்டு, நவீன முறையில் தேனீ வளர்ப்பு தொழில் நுட்பங்கள் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் வேல்முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தேனீ வளர்ப்பின் பயன்கள் குறித்துப் பேசினார். விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர;கள், பண்ணையாளா;கள், பெண்கள், பட்டதாரி இளைஞர்கள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவா;கள் மற்றும் நாமக்கல் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவ மாணவிகள் உள்பட 65 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

நாமக்கல்; வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தேனீக்களின் வகைகள், நவீன முறையில் தேனீக்களை வளர்க்கும் முறைகள், தேவையான உபகரணங்கள், தேனைப் பிரித்தெடுக்கும் முறைகள் மற்றும் தேனீவளர்ப்புக்கேற்ற பயிர் சாகுபடி முறைகள் குறித்து தெளிவாக பயிற்சியும் செயல் விளக்கமும் அளித்தார்.

Next Story