காவல் நிலையத்தில் கிராம கண்காணிப்பு குழு சிறப்பு கூட்டம்

காவல் நிலையத்தில் கிராம    கண்காணிப்பு குழு சிறப்பு கூட்டம்
X

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கிராம கண்காணிப்பு குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

Village Monitoring Committee பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கிராம கண்காணிப்பு குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது

Village Monitoring Committee

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சேகரன் மொளசி காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ஆகியோர் தலைமையில் கிராம கண்காணிப்பு குழு (வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி) கூட்டமானது நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், கிளர்க்குகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் பேசியதாவது:

கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகள் நடைபெறும் குற்ற சம்பவங்களை உடனுக்குடன் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் .மேலும் காவல் நிலையத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.ஊருக்குள் சந்தேகப்படும் வகையில் புதிய நபர்களின் நடமாட்டம் செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் உடனுக்குடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்..மேலும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும். ஏனெனில் கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் குற்றங்களை அதிகம் தடுக்கும் வகையில் காவல்துறையுடன் இணைந்து ஊர் பிரமுகர்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் ஆகியோர் இணைந்து செயல்படும் பொழுது, அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் இவ்வாறு அவர் பேசினார

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி