குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற இருவர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல்  மது விற்ற இருவர் கைது
X

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற இருவர் கைது (கோப்பு படம்)

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், சந்தியா, எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், குணசேகரன், ஏட்டுகள் ராம்குமார் உள்பட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம் சாலை சிட்டி யூனியன் வங்கி அருகில்,மது விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்தனர். அதே போல் பழைய முருகன் தியேட்டர் பகுதியில் மது விற்ற நபரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ரமேஷ்கண்ணன், 34, குமாரபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி, 62, என்பது தெரியவந்தது.

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!