குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்
X

குமாரபாளையம் சந்து பொங்கல் விழாவில் நடந்த தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்தில் பக்தர்கள் அம்மன் வேடமிட்டும், தீர்த்தக்குடங்கள் எடுத்தவாறு வந்தனர்.

-

Kumarapalayam Temple Festival குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.இந்த ஆண்டும் கோலாகலமாக நடந்தது.

Kumarapalayam Temple Festival

குமாரபாளையத்தில் சந்து பொங்கல்விழா கோலாகலமாக நடந்தது.

குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி, தை மாதங்களில் அந்தந்த பகுதி மக்கள் சுகாதாரமாக வாழவும், மாணவ, மாணவியர் நன்கு படிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், தொழில் வளம் சிறக்கவும் சந்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி குமாரபாளையம் நகர் பகுதியில் நேற்று பெரும்பாலான இடங்களில் சந்து பொங்கல் விழா களை கட்டியது. பம்பை, மேளங்கள் முழங்க காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

பக்தர்கள் பலரும் அம்மன் வேடமிட்டு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொங்கல் படையலிட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அந்தந்த பகுதி மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் உணவு உண்டனர். இதனால் சகோதரத்துவம், நட்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் ஆகிய பழக்க வழக்கங்கள் வளர ஏதுவாக உள்ளது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்ற விழாக்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்கள் பராமரிக்கப்பட காரணமாக அமைவதோடு ஆண்டுதோறும் அப்பகுதிமக்கள் ஒற்றுமையுடன் பணி செய்ய இது நல்வாய்ப்பாக அமைகிறது. உறவுகள் அனைத்தும் ஒன்று கூடுவதால் பலப்படுவதாக நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் நடப்பதால் அனைவரும் சந்திப்பதற்கு நல்வாய்ப்பாகவும் அமைகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி