குமாரபாளையம்; அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

குமாரபாளையம்; அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
X

திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலாம்பாளையம் பேரூராட்சி ஆயக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த பூபேந்திரன், பிரபாகரன் உள்ளிட்ட 50 பேரும், மற்றும் சின்னகவுண்டம்பாளையம் பகுதிகளை சேர்ந்த அர்ஜுனன், விக்னேஷ் உள்ளிட்ட 50 இளைஞர்களும், திமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுக நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி முன்னிலையில் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் .செந்தில், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை, பொருளாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் சுரேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம்,பிரதீப், மணிகண்டன், மகளிர் அணி சேர்ந்த தீபா,சதாசிவம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி