காமராசர் பல்கலைக் கழகம் முன்பு விசிக ஆர்ப்பாட்டம்

காமராசர் பல்கலைக் கழகம் முன்பு விசிக ஆர்ப்பாட்டம்
X

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர்

தேர்வு ஆணையரை புறக்கணித்தது பல்கலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேருக்கு பணி வழங்கிடக்ககோரி விசிக கண்டன ஆர்பாட்டம்

தேர்வு ஆணையரை புறக்கணித்தது மற்றும் பல்கலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேருக்கு பணி வழங்கிடக வலியுறுத்தி மதுரை காமராஜர் பல்கலைக்கழக வாயிலில் விடுதலைச்சிறுத்தைகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை தெற்கு மாவட்ட விசிக சார்பில், நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப் முன்னிலையில், மாநில துணைச்செயலாளர் இளந்தென்றல் சிறப்புரையாற்றினார்.மாநில முதன்மை செயலாளர் பாவரசு, மாநில துணைச்செயலாளர் மாலின், பல்கலை சின்னா, பார்த்தசாரதி உள்ளிட்ட, 80 பேர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.மாநில அரசின் முதல்வர், அமைச்சர் உயர் கல்வி துறையை கலந்துகொள்ளாமல்,

ஆளுநர் தன்னிச்சையாக காமராசர் பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேருக்கு பணி வழங்க கோரியும்,உசிலம்பட்டி பகுதியில் ஏற்படும் சாதிய மோதல் மற்றும் தலித் விரோத போக்கினை கண்டித்தும், கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி