மதுரை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சாலை மறியல்

மதுரை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சாலை மறியல்
X

திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கேோரி பொதுமக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சம்பக்குளம், புதுக்குடி , கிழாநேரி ஆகிய மூன்று கிராமங்களில் சாலை வசதி செய்து தரக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, மூன்று கிராம மக்கள் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் , மதுரை - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர்.மதுரை மாவட்டத்தை பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மதுரை நகரில், அண்ணா நகர், மேலமடை, வீரவாஞ்சி தெரு, ஜூபிலி டவுன், கோமதிபுரம் ஆகிய பகுதிகளிலும் சாலையில் பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மதுரை நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

Tags

Next Story