சோழவந்தானில் இந்து முன்னணியின் கொடியேற்று விழா

சோழவந்தானில் இந்து முன்னணியின் கொடியேற்று விழா
X

ரிஷபம் கிராமத்தில் கொடியேற்ற வந்த இந்து முன்னணி அமைப்பினர்

சோழவந்தான் சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது .

ரிஷபம் கிராமத்தில் கொடியேற்ற வந்த இந்து முன்னணி அமைப்பினரை, பெண்கள் குலவை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தென்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தர் படத்திற்கு மரியாதை செய்து பின்னர், கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் அழகர்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றினர். நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, கருப்பட்டி, இரும்பாடி, பேட்டை, கிராமம், ரிஷபம், சோழவந்தான் நாடார் தெரு ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story