மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்
![மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம் மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்](https://www.nativenews.in/h-upload/2022/08/09/1574542-water-death.webp)
வைகையாற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம், கரடிக்கல் அருகே வைகை ஆற்றில் சுழலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த வினோத்குமார் சி ஆர் பி .எப் வீரராவார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நண்பர் அன்பரசனும் உயிரிழந்துள்ளார். கூறப்படுகிறது. சுழலில் சிக்கிய அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை, திருமங்கலம், செக்கானூரணி போன்ற பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu