தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்ற சோழவந்தான் மாணவர்கள்

தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்ற  சோழவந்தான் மாணவர்கள்
X

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் வாழ்த்து பெறும் மாணவர்கள்.

சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இருபாலர் பயிலும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளியின் தாளாளராக செந்தில்குமார் இருந்து வருகிறார். பள்ளி மாணவர்கள் கல்வியிலும் தனித் திறன் போட்டியிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டு பரிசுகளையும் கோப்பைகளையும் பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி அனிஷா பாத்திமா இளைய ஜூம்மா நடன பயிற்சியாளராகவும், ஆறாம் வகுப்பு மாணவர் முகமது ஜாபர் இளைய மேஜிசியன் ஆகவும் வெற்றி பெற்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பள்ளித் தாளாளர் பள்ளி முதல்வர், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!