மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் தொடக்கம்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட மாணவ ,மாணவியருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில், உள்ள 15 வட்டார வள மையங்களில் தலா 1 முகாம் வீதம் மதிப்பீட்டு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம் மதுரை கிழக்கு ஒன்றியம் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மதிப்பீட்டு மருத்துவ முகாமில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு மாற்றுத்திறன் சான்றிதழ் புதுப்பித்தல் மற்றும் புதிய சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை ,உதவி உபகரணங்களுக்கான பதிவு உதவித்தொகைக்கான பதிவு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில், கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழைத்து வரும் பாதுகாவலர்களுக்கும் போக்குவரத்து செலவினம் தேனீர் மற்றும் சிற்றுண்டி மதிய உணவும் வழங்கப்பட்டது. இன்றைய முகாமில், 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாளை, மதுரை மேற்கு வட்டார வள மையத்திற்குரிய பள்ளிகளுக்கு மதுரை பிபி குளம் பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளியில் இதே சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மரு.செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் மாற்று திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் மதுரையில் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடக்கிறது.பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்வி மாவட்டத்தின் கீழ் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு மருத்துவ மதிப்பீடு முகாம் நடத்தப்படுகிறது.
சென்னை மாநில திட்ட இயக்குனரின் வழிகாட்டுதல்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வட்டார வள மையங்களில் இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது இதன்படி பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை இம்முகாம்கள் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu