ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
![ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி](https://www.nativenews.in/h-upload/2025/02/07/1976550-ghh.avif)
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தோ்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.இந்நிலையில், இந்தத் தோ்தலை ரத்து செய்யக் கோரி, சுயேச்சை வேட்பாளா் அக்னி ஆழ்வாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், அருள்முருகன் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஈரோடு கிழக்கு தோ்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மாவதி, பாண்டியன் ஆகிய வேட்பாளா்கள் வேட்புமனுக்களில் பல தகவல்களை மறைத்து முறைகேடாக போட்டியிட்டுள்ளனா்.
இது குறித்து தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த இடைத்தோ்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்பு மனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரா் அளித்த புகாா் மனு மீது தோ்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினா்.
மேலும், தோ்தல் முடிந்துவிட்டதால் இடைத்தோ்தலை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu