டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது கடை ஊழியர்கள் குற்றச்சாட்டு

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது கடை ஊழியர்கள் குற்றச்சாட்டு
X

பைல் படம்

டாஸ்மாக் மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் மீது டாஸ்மாக் கடை ஊழியர்கள் சரமாரி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்

டாஸ்மாக் மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் மீது, டாஸ்மாக் கடை ஊழியர்கள் சரமாரி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில், அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கிட்டங்கியில் , தெற்கு மாவட்ட மேலாளராக உள்ள ராஜேஸ்வரி, கடந்த அதிமுக ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் - மூலம் பணி நியமனம் செய்யப்பட்டவர் எனவும், பணி நியமனம் செய்த நாள் முதல் திருமங்கலம் பகுதியில் உள்ளது 148 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களிடம் மாதம் தோறும் ரூபாய் 5000 வரை லஞ்சம் கேட்பதாகவும் , கொடுக்க மறுத்தால் பணியிட மாற்றம் செய்வதாகவும், பணியிடமாற்றம் கேட்பவர்களிடம் ரூபாய் 50 ஆயிரம் வரை லஞ்சம் பெறுவதாகவும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எதிர்த்து கேட்பவர்கள் மீது, ராஜேஸ்வரி தன் வசமுள்ள விற்பனையாளர்களை வைத்து ஜாதி சண்டையை ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையத்தில் வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டி வருவதாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுவதுடன் , இது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக அரசு உடனடியாக இந்த மேலாளரை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கோருகின்றனர்.

Tags

Next Story