மதுரை கோயில்களில் பங்குனி பிரதோஷ விழா: திரண்ட பக்தர்கள் கூட்டம்
சோழவந்தான் பிரளயநாதர் விசாக நட்சத்திர ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழா.
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், செய்தனர். பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம் வந்து சிவாய நமக சிவாய நமக என பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், சிம்மத்தில் பழைய சொக்கநாதர், செல்லூர் திருவாப்புடையார், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர், மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட ஆலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu