டூவீலரில் இருந்து தள்ளி கொலை!.. டவுன் பஞ்சாயத்து ஊழியர் கைது!

டூவீலரில் இருந்து தள்ளி கொலை!.. டவுன் பஞ்சாயத்து ஊழியர் கைது!
X
இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி வண்டியில் அழைத்துச்சென்று கீழே தள்ளி கொலை செய்த வழக்கில், பரமத்தி டவுன் பஞ்சாயத்து ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் : இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி வண்டியில் அழைத்துச்சென்று, கீழே தள்ளி கொலை செய்த வழக்கில் பரமத்தி டவுன் பஞ்சாயத்து ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவ விவரம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(38) கட்டட மேஸ்திரி. இவரது மனைவி மணிமேகலை (32). இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு போன் பேசிவிட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். பின், நீண்ட நேரமாகியும் மணிமேகலை திரும்பி வரவில்லை.

மணிமேகலை உயிரிழப்பு

இந்நிலையில், மாவுரெட்டியிலிருந்து, மாதேஸ்வரம்பாளையம் செல்லும் சாலையில் மணிமேகலை மயங்கி கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

கடைசியாக தொடர்புகொண்டவர்

இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மணிமேகலையிடம் இருந்த மொபைல் போனில் கடைசியாக பேசிய நபரை தேடி வந்தனர். இதில், கடைசியாக பேசியவர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே கொமராபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் உதயகுமார் (33), என்பதும் பரமத்தி டவுன் பஞ்சாயத்தில் தண்ணீர் சப்ளை பிரிவில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மணிமேகலை - உதயகுமார் தொடர்பு

அவரிடம் நடத்திய விசாரணையில், மணிமேகலையும், உதயகுமாரும் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று, தொலைபேசியில் உதயகுமாரை அழைத்த மணிமேகலை, டூவீலரில் இருவரும் பரமத்தி நோக்கி சென்றுள்ளனர்.

வாக்குவாதத்தில் சம்பவம்

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, வண்டியில் இருந்து மணிமேகலையை, உதயகுமார் கீழே தள்ளி உள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த மணிமேகலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையறிந்த உதயகுமார் தலைமறைவாகி உள்ளார்.

உதயகுமார் கைது

பின், போலீசார் விசாரணையில் மணிமேகலையை வண்டியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததை உதயகுமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பரமத்தி போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story