மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா
![மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா](https://www.nativenews.in/h-upload/2022/12/29/1635575-img-20221229-wa0004.webp)
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2022 - 23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான போட்டிகள் வகுப்பு வாரியாக 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் மூன்று பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை 36 மாவட்டங்களில் இருந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பொறுப்பு ஆசிரியர் துணையுடன் பாதுகாப்போடு சார்ந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரவும் சென்னையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாணவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது ,மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரிவு வாரியாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அதில், மதுரை மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கான 50 போட்டிகள், 6 மையங்களில் நடைபெறுகிறது.இதில், 38 மாவட்டத்தைச் சேர்ந்த 4400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேருந்து, தங்கும் வசதி, உணவு பட மூன்று நாட்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
9, 10 வகுப்புகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன. ஒரு மாவட்டத்தில் 5 முதல் 6 இடங்களில் பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் காண்கலை, நுண்கலை, நாடகம், மொழி திறன் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இசை, வாய்ப் பாட்டு, கருவி இசை - தோல் கருவி, கருவி இசை - துளை, காற்றுக் கருவி, கருவி இசை - தந்திக் கருவி, இசைச் சங்கமம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடனப் போட்டி நடைபெற்றுகிறது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரடி கண்காணிப்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், மாநில அளவில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கபடுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜன 12-ல் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் .ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu