திருப்பரங்குன்றம் சுரங்கப் பாதையில் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதை
ஒளி கிடைக்குமா திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதைக்கு பரிதவிக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதை தியாகராஜா கல்லூரி மற்றும் அவனியாபுரம் தென்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சுரங்கப்பாதை ஆகும். இது கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுரங்கப்பாதையில் உள்ள தெரு விளக்குகள் விளக்குகள் எரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் கவுன்சிலர் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் ஏதேனும் இருட்டினை பயன்படுத்தி செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்துடனேயே ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கிறோம் இங்கு படிக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பாதசாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். எப்போது எங்களுக்கு விடியல் கிடைக்கும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் .மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மின்விளக்கு ஒப்பந்த நிறுவனங்கள் சுரங்கப்பாதையில் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் தெரு விளக்கு எரிய ஆவண செய்வார்களா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்து நிற்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu