மத்திய அரசைக்கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரை கோரிப்பாளையம் கிளை சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டம்
மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ .கட்சி சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில் மக்களின் பிரச்னைகளை பேசும் மக்களவை உறுப்பினர்களின் குரல்வளையை நசுக்கும் மத்திய அரசின் வாய்ப்பூட்டு ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தியும், மக்கள் உரிமையை காத்திடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்டம் அனைத்து கிளைகளில், வாயில் கருப்பு துணிகட்டி பதாகை ஏந்தி அமைதி வழியில் நூதன போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், எஸ். டி .பி .ஐ .வடக்கு 28வது வார்டு கோரிப்பாளையம் கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவர் பிலால்தீன், தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர், வடக்கு தொகுதி நிர்வாகி புரோஸ்கான், பொருளாளர் ஜின்னா, வார்டுத்தலைவர் ராஜா உசேன், ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu