மதுரை அருகே மத்திய பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்
![மதுரை அருகே மத்திய பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் மதுரை அருகே மத்திய பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்](https://www.nativenews.in/h-upload/2023/02/12/1659440-img-20230212-wa0029.webp)
மதுரை அருகே சமயநல்லூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள்
மதுரை மாவட்டம், சமயநல்லூரில்.மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க வேண்டும் என , கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என குற்றம்சாட்டி மதுரை மாவட்டம், சமயநல்லூரில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வேளாண்மை துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட நடப்பாண்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை குறைத்து மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அதேபோல், உரம் மானியத்துக்கு ரூ.54,000 கோடியை குறைத்து தாக்கல் செய்திருப்பதையும் கண்டித்து போராட்டத்தில் விவசாயிகள் கோஷமிட்டனர். மேலும்,100 நாள் வேலை திட்ட நிதியை 33 சதவீதம் குறைத்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதில், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள், விவசாய சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட ச் செயலாளர் உமா மகேஸ்வரன், விவசாய சங்க மாவட்டத்தலைவர் வேல்பாண்டி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் காசி, விவசாய சங்க மேற்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி, உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu