மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
X

 மதுரையில் திடீரென பெய்த மழையால் குற்றாலம் போல் காட்சி அளிக்கும் திருப்பரங்குன்றம் மலை

திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் கன மழை பெய்து வருகிறது.

மதுரையில் திடீரென பெய்த மழையால் குற்றாலம் போல் திருப்பரங்குன்றம் மலை காட்சி அளிக்கிறது

மதுரையில் காலையில் வெயில் வாட்டிய எடுத்த நிலையில் மாலை 5 மணியிலிருந்து மதுரை புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.அந்த வகையில் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால், திருப்பரங்குன்றம் மலையில் இருந்து வழிந்து வரும் நீர் பார்ப்பதற்கு குற்றால அருவிகளில் வலியும் நீரை போல காட்சியளிக்கிறது. அதோடு மலையில் மேகங்கள் உரசி செல்வது பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.அதே சமயம் விடாமல் பெய்த மழையால் தற்போது, இந்த பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags

Next Story
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா