செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஸ்கேட்டிங்: ஆட்சியர் தொடக்கம்

ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி:
ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி, மதுரை மாவட்டத்திற்கு வருகைதர உள்ள செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் மதுரை வண்டியூர் சுந்தரம் பூங்காவில், உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாநகர் பகுதியான தெப்பக்குளம்,மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் 25.07.2022-அன்று ஒலிம்பியாட் ஜோதி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஒலிம்பியாட் ஜோதிவருகை தரும் அன்று வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செஸ் போட்டிகள் மற்றும் ஒலிம்பியாட் ஜோதிதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இன்றைய தினம் மதுரை வண்டியூர் சுந்தரம் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் செஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா அவர்கள் மற்றும் ஸ்கேட்டிங் அசோசியேசன் நிர்வாகிகள் பலர் கலந்து பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu