சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை கோரி புகார்

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை கோரி புகார்
X

சோழவந்தான் அருகே.காடுபட்டி ஊராட்சியில் திடீரென சாலை.மறியலில் ஈடுபட்டவர்கள்

குழாய் உடைப்பை சரி செய்து கொண்டிருந்த வேளையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கைகோரி போலீசில் புகார்

சோழவந்தான் அருகே.காடுபட்டி ஊராட்சியில் திடீரென சாலை.மறியலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் ,சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி. 9 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் உள்ளார். இந்நிலையில் அங்குள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. அதனை சரி செய்யும் பொருட்டு காலை 6:30 மணி அளவில் தலைவர் மற்றும் பிளம்பர் உதவியுடன் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிலர் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி திடீரென.சாலையில் அமர்ந்து குடத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கூறும் போது, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டியும் குழாய் உடைப்பை சரி செய்து கொண்டிருந்த வேளையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.வேலை நடந்து கொண்டிருக்கும்போதே பொதுமக்கள் மறியல் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story