நாட்டின் முதுகெலும்பாக வருமான வரித்துறை திகழ்கிறது

நாட்டின் முதுகெலும்பாக வருமானவரித்துறை செயல்பட்டு வருகிறது என்றார் தலைமை வருமான வரி ஆணையர் திருமதி சீமராஜ்.
நாட்டின் முதுகெலும்பாக வருமானவரித்துறை செயல்பட்டு வருகிறது என்றார் தலைமை வருமான வரி ஆணையர் சீமா ராஜ்.
162 வது வருமான வரி தினம் நாடு முழுவதும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . இதையொட்டி ,மதுரை தலைமை வருமான வரி ஆணையர் அலுவலகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை ஒட்டி, மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் மதுரை தலைமை வருமான வரி ஆணையர் சீமா ராஜ் தலைமையில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், அனைத்து உயரதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் .பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து, 162 வது வருமான வரி தின விழா வருமான வரி அலுவலக குடியிருப்பு வளாகத் திடலில் நடைப்பெற்ற. விழாவுக்கு , தலைமை வருமான வரி ஆணையர் சீமா ராஜ் தலைமை வகித்து பேசியதாவது, இந்தியாவில்1886 முதல் வரி விதிப்பு நடந்தது என்றும் தொடர்ந்து 1922ல் வருமான வரி சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது . மேலும், 1946 இல் துறை சார்ந்த வருமான வரி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். 2002 ஆம் ஆண்டு வருமான வரித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது. 2006 முதல் வருமானவரி தாக்கல் ஆன்லைன் மூலம் செய்யும் வசதி செய்யப்பட்டது. நாட்டின் முதுகெலும்பாக வருமானவரித்துறை செயல்பட்டு வருகிறது. வருமானவரி தாக்கல் ஆன்லைன் மூலம் அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் வரி கட்டுபவர்களின் பல்வேறு சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றார் சீமா ராஜ்
விழாவில், மதுரை மட்டுமின்றி மதுரையின் தலைமை வருமான வரி ஆணையர் பொறுப்பில் உள்ள திருச்சி , கரூர் , அரியலூர் , பெரம்பலூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , நாகப்பட்டிணம் , திருவாரூர் , சிவகங்கை , திண்டுக்கல் , தேனி , விருதுநகர் , ராமநாதபுரம் , காரைக்குடி , நாகர்கோவில் , தூத்துக்குடி , தென்காசி , திருநெல்வேலி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தவிர தணிக்கையாளர்கள் . வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மட்டுமன்றி உயர் வரி செலுத்துவோரும் கலந்து கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu