சாலை பாதுகாப்பு வார இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் பங்கேற்பு

சாலை பாதுகாப்பு  வார இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் பங்கேற்பு
X

மதுரையில் நடந்த சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

மதுரை சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் , போக்குவரத்துத் துறை சார்பாக வனிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.முர்த்தி, சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தின் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

இதனை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 11.01.2023 முதல் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வனிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.முர்த்தி , மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில், ஆண்கள், பெண்கள் என ,200-க்கும் மேற்பட்ட இரு பாலர் கலந்து கொண்டனர். இப்பேரணி, மதுரை காந்தி நிணைவு அருங்காட்சியகம் வளாகத்தில் தொடங்கி, கே.கே நகர் தோரண வாயில் வழியாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், இணை போக்குவரத்து ஆணையர் பொன் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்காரவேலன், சித்ரா உட்பட வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story