மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு ரத்தக்காயம்: அதிகாரிகள் விசாரணை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு ரத்தக்காயம்: அதிகாரிகள் விசாரணை
X

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி

யானையின் துதிக்கையில் இருந்து தரையில் ரத்தம் வழிந்த நிலையில் சென்றதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது குறித்து யானை பாகனிடம் கோயில் அதிகாரிகளிடம் விசாரணை செய்கின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.தற்போது ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் காலை மாலை இரு வேலையும் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்பாளும் உற்சவ மூர்த்திகளாக பஞ்சமூர்த்தி களுடன் வீதி உலா வருவது வழக்கம்.

இன்று காலை நடைபெற்றது வீதி உலாவின் போது சுவாமி, அம்மாள்புறப்பாட்டின் போது யானை பார்வதி முன்னாடி செல்லும் வழியெல்லாம் யானையின் துதிக்கையில் இருந்து தரையில் ரத்தம் வழிந்த நிலையில் சென்றதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.இதற்குக் காரணம் நேற்று மாலை ஊர்வலத்தின் போது பாகனின் சொல்பேச்சை கேட்காததால் யானையை பாகன் அடித்து துன்புறுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.யானை, பார்வதி ஏற்கனவே கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story