சேலத்தில் ₹70 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

சேலத்தில் ₹70 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
X
அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை கூடுகிறது. இதில் நேற்று ரூ.70 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையாகின.

சேலம் : அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை கூடுகிறது.இதில் நேற்று ரூ.70 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையாகின.

நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சந்தைக்கு, பல்வேறு பகுதியில் இருந்து 700 மாடுகள் வரை, விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் ஜெர்சி, பசுமாடு, காங்கேயம், வடகத்தி மாடு, தெற்கத்தி மாடு உள்ளிட்ட பலரக மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

கன்றுகள் ₹4,500 முதல் ₹8,000 வரையும், மாடுகள் ரகத்தை பொறுத்து ₹9,500 முதல் ₹68ஆயிரம் வரை விற்பனையானது. இதில் மொத்தம் ₹70லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.

நேற்று நடந்த சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்திருந்ததால், விலை சரிந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மேட்டூரில் ஐ.டி.ஐ. மாணவருக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்