மதுரைக்கு குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ஐந்தடுக்கு பாதுகாப்பு

மதுரைக்கு குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ஐந்தடுக்கு பாதுகாப்பு
X

பைல் படம்

மதுரைக்கு குடியரசுத்தலைவர் வருகையை யொட்டிமீனாட்சி அம்மன் கோவிலைசுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

மதுரைக்கு குடியரசுத்தலைவர் வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலைசுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 18 மற்றும் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வரும் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்படும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு காலை 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

சிவராத்திரி தினமான வரும் 18ஆம் தேதி அன்று காலை 12 மணி முதல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். அதன் தொடர்ச்சியாக கோவிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோவிலை சுற்றி இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒரு கோபுரத்தில் இரண்டு காவலர்கள் என கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி கோவிலுக்கு வந்தவுடன் தற்காலிக வரவேற்பரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி கோவிலை சுற்றியுள்ள ஆடி வீதிகளில் சாலையோர கடைகள் அமைக்கக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல மதுரையில் 3500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக மதுரை விமான நிலையம் முதல் தெற்கு வாசல் சந்திப்பு வரையிலும், தெற்கு வெளி வீதி முழுவதும், தெற்குவாசல் சந்திப்பு முதல் கிழக்குவாசல் சந்திப்பு,கிழக்கு வெளிவீதி, காமராஜர் சாலை விளக்குத்தூண் முதல் கீழ வாசல் சந்திப்பு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, வெண்கல கடை தெரு, தெற்கு ஆவணி மூல வீதி பழைய காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து ஜடாமுனிகோவில் சந்திப்பு,

கிழக்கு மாசி வீதி- மொட்டை பிள்ளையார் கோவில் முதல் விளக்குத்தூண் வரை, அழகர் கோவில் சாலை இருபுறமும் கோரிபாளையம் முதல் தாமரை தொட்டி வரை முற்றிலுமாக வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பேருந்துகளும்,வாகன போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.கோவிலை சுற்றியுள்ள நான்கு கோபுர வாசல்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Tags

Next Story