மதுரை மாநகராட்சி சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேரணி
மஞ்சப்பை திட்டம் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு துணிப் பைகளை மதுரை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினர்
மதுரை மாநகராட்சி காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காற்று மாசு தவிர்த்தல் குறித்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
மத்திய அரசின் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை மற்றும் தேசிய பசுமைப் படை மாணவர்கள் பங்குபெற்ற காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி பேரணி கடந்த 06.02.2023 அன்று, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தொடக்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மேயர், ஆணையாளர் தொடக்கி வைத்தார். இப்பேரணியில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 250 நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவர்கள் காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும், இப்பேரணியில் காற்று மாசு தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இப்பேரணியில், நெகிழி பைகளின் பயன் பாட்டினை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு துணிப் பைகளை, மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணி, வடக்கு வெளி வீதி, கிருஷ்ணராயர் தெப்பம் ரோடு,மீனாட்சி பஜார் , ஸ்கார்ட் ரோடு வழியாக சேதுபதி பள்ளியை மீண்டும் வந்தடைந்தது.
இந்நிகழ்வில், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மதுரை மாவட்ட கல்வி அலுவலர் கு.முரளி, மண்டல த்தலைவர் (மத்தியம்) பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாசுக்கட்டுப் பாடு வாரிய உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் தேவகிருபை, சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், மாமன்ற உறுப்பினர் விஜயா , மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், சேதுபதி பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், திருமங்கலம் கிரின் டிரஸ்ட் உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu